Tuesday, April 23, 2013

முஅத்தின் தொழுகைக்கு அழைப்பதை நீங்கள் செவியுற்றால் !!!!!!


முஸ்லிம்: அத்தியாயம்: 4, பாடம்: 4.07, எண் 577
"முஅத்தின் தொழுகைக்கு அழைப்பதை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். 


பின்பு என் மீது ஸலவாத் சொல்லுங்கள். யார் என் மீது ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகிறான்.

பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும். அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன்.

எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை கட்டாயம் உண்டு" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரிப்னில் ஆஸ் (ரலி)




-------------------------------------------------------------
முஸ்லிம்: அத்தியாயம்: 4, பாடம்: 4.07, எண் 578

முஅத்தின், 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' என்று சொன்னால் 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' என்றும்

பின்பு அவர், 'அஹ்ஷது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று சொன்னால் 'அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்' என்றும்

பின்பு அவர், 'அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்' என்று சொன்னால் 'அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்' என்றும்

பின்பு அவர், 'ஹய்ய அலஸ் ஸலாஹ்' என்று சொன்னால் 'லா ஹவ்லா வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்' என்றும் பின்பு அவர், 'ஹய்ய அலல் ஃபலாஹ்' என்று சொன்னால் 'லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்' என்றும்

பின்பு அவர், 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' என்று சொன்னால் 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' என்றும்

பின்பு அவர் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று சொன்னால் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்றும் உங்களுள் உளமுவந்து (திருப்பிக்) கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : உமர் பின் அல் கத்தாப் (ரலி)
------------------------------------
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, 'மக்களே! உங்களால் இயன்ற (நற்) செயல்களையே செய்துவாருங்கள். ஏனெனில், நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ்வும் சலிப்படைய மாட்டான்.

அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (நற்) செயல் யாதெனில், குறைவாக இருந்தாலும் நிலையாக இருப்பதேயாகும்' என்றார்கள்.
(புகாரி: 5861)
--------------------

யா அல்லாஹ் இந்த இலகுவான அமல்களை செய்து சொர்க்கத்தில் நுழைய, உன்னிடம்மே உதவி தேடுகிறோம்.

ஆமீன்.

1 comment:

  1. /யா அல்லாஹ் இந்த இலகுவான அமல்களை செய்து சொர்க்கத்தில் நுழைய, உன்னிடம்மே உதவி தேடுகிறோம்.
    / ஆமீன்..

    ReplyDelete