Wednesday, August 14, 2013

அன்றாட நிகழ்வுகள், அறியாத விஷயங்கள்

மனிதன் தன் உயிரை காண்பது;

புஹாரி 1680. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு மனிதன் இறக்கும்போது அவனது பார்வை நிலைகுத்தி நிற்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். மக்கள் "ஆம் (கவனித்திருக்கிறோம்)" என்று விடையளித்தனர். "உயிர் பிரிந்து செல்லும்போது, அதைப் பார்வை பின்தொடர்வது தான் அது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. 


கருத்துவேறுபாடுகள்;

புஹாரி 3336. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப்போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன. என ஆயிஷா(ரலி) அறிவித்தார். இது மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


புஹாரி 1418. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையைத் துவக்கியதும் முதலில் என்ன கூறுவார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையைத் துவக்கியதும் "அல்லாஹும்ம ரப்ப ஜப்ராயீல வ மீக்காயீல வ இஸ்ராஃபீல, ஃபாத்திரஸ் ஸமாவாத்தி வல்அர்ளி, ஆலிமல் ஃகைபி வஷ்ஷஹாதத்தி, அன்த தஹ்குமு பய்ன இபாதிக ஃபீமா கானூ ஃபீஹி யக்தலிஃபூன். இஹ்தினீ லிமக்துலிஃப ஃபீஹி மினல் ஹக்கி பி இத்னிக, இன்னக தஹ்தீ மன் தஷாஉ இலா ஸிராதிம் முஸ்தகீம்" என்று கூறுவார்கள்" என்று பதிலளித்தார்கள்.

(பொருள்: இறைவா! (வானவர்களாகிய) ஜிப்ராயீல், மீக்காயீல், இஸ்ராஃபீல் ஆகியோரின் அதிபதியே! வானங்கள் மற்றும் பூமியை முன்மாதிரியின்றிப் படைத்தவனே! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவனே! நீ உன் அடியார்களிடையே அவர்கள் கொண்டிருந்த கருத்துவேறுபாடுகள் குறித்து (மறுமையில்) தீர்ப்பு வழங்குவாய். (பிற மக்களால்) மாற்றுக் கருத்து கொள்ளப்பட்டாலும் சத்திய (மார்க்க)த்திலேயே உன் தயவால் என்னை நிலைத்திருக்கச் செய்வாயாக! நீ நாடியவர்களை நேரான வழியில் நீயே செலுத்துகிறாய்.(இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.)


அஹ்மத் 16519: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும், அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள். 
அறிவிப்பாளர் :
இர்பான் பின் ஸாரியா(ரலி  இகாமத் சொல்லப்பட்டும் சுன்னத்தான  தொழுகையை  தொழுவது;
முஸ்லிம் : அத்தியாயம்: 6, பாடம்: 6.08, எண் 1161

"தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான (அந்த ஃபர்ளுத்) தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை" என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

குறிப்பு :
நான் அம்ரு பின் தீனார் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது, இந்த ஹதீஸை அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். ஆனால், "இவ்வாறு நபி (ஸல்) கூறினார்கள்" எனச் சொல்லவில்லை என்று ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.


-இன்ஷாஅல்லாஹ் தொடரும், தொடருங்கள். 

Sunday, June 16, 2013

"அறைகூவல்" & "தோலுரித்துக்காட்டுதல்"

அஸ்ஸலாமுஅலைக்கும்,
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவனின் திருப்பெயரால் துவங்குகிறேன்.

"அறைகூவல்" & "தோலுரித்துக்காட்டுதல்"

இணையத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் வார்தைகள் இவை. பற்று, உறுதி, வீரம் சார்த்த சொல்லாக பயன்படுத்தப்படுகிறது என்று உணர்சிவசப்பட்டேன், பிறகு சிந்தித்ததில் இவ்வார்த்தைகளை பயன்படுத்த என்னிடம் உள்ளது இவைதான்:

"உன்னைவிட நன்மையில் நான் எத்தகையவன் என்று அறைகூவல் விட்டு, என் பாவங்களை தோலுரித்துக்காட்டினால்" இந்த பூமியில் உள்ள இழிபிறவிகளில் நானும் ஒருவனாகி போவேனோ என அஞ்சுகிறேன்.

அல்-குர்ஆண் 26:87 மேலும், மனிதர்கள் அனைவரும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படும் நாளில் என்னை இழிவுபடுத்திவிடாதே!

அல்-குர்ஆண் 57:21 ஓடுங்கள்; ஒருவரையொருவர் முந்திச் செல்வதற்கு முயலுங்கள்; உங்கள் இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் வானம், பூமியின் அளவிற்கு விசாலமான சுவனத்தை நோக்கியும்! அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களுக்காக அது தயார் செய்யப்பட்டிருக்கின்றது. இது அல்லாஹ்வின் அருளாகும். தான் நாடுகின்றவர்களுக்கு அதனை அவன் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் பேரருள் உடையவனாக இருக்கின்றான்.

Tuesday, April 23, 2013

முஅத்தின் தொழுகைக்கு அழைப்பதை நீங்கள் செவியுற்றால் !!!!!!


முஸ்லிம்: அத்தியாயம்: 4, பாடம்: 4.07, எண் 577
"முஅத்தின் தொழுகைக்கு அழைப்பதை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். 


பின்பு என் மீது ஸலவாத் சொல்லுங்கள். யார் என் மீது ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகிறான்.

பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும். அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன்.

எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை கட்டாயம் உண்டு" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரிப்னில் ஆஸ் (ரலி)
-------------------------------------------------------------
முஸ்லிம்: அத்தியாயம்: 4, பாடம்: 4.07, எண் 578

முஅத்தின், 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' என்று சொன்னால் 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' என்றும்

பின்பு அவர், 'அஹ்ஷது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று சொன்னால் 'அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்' என்றும்

பின்பு அவர், 'அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்' என்று சொன்னால் 'அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்' என்றும்

பின்பு அவர், 'ஹய்ய அலஸ் ஸலாஹ்' என்று சொன்னால் 'லா ஹவ்லா வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்' என்றும் பின்பு அவர், 'ஹய்ய அலல் ஃபலாஹ்' என்று சொன்னால் 'லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்' என்றும்

பின்பு அவர், 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' என்று சொன்னால் 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' என்றும்

பின்பு அவர் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று சொன்னால் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்றும் உங்களுள் உளமுவந்து (திருப்பிக்) கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : உமர் பின் அல் கத்தாப் (ரலி)
------------------------------------
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, 'மக்களே! உங்களால் இயன்ற (நற்) செயல்களையே செய்துவாருங்கள். ஏனெனில், நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ்வும் சலிப்படைய மாட்டான்.

அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (நற்) செயல் யாதெனில், குறைவாக இருந்தாலும் நிலையாக இருப்பதேயாகும்' என்றார்கள்.
(புகாரி: 5861)
--------------------

யா அல்லாஹ் இந்த இலகுவான அமல்களை செய்து சொர்க்கத்தில் நுழைய, உன்னிடம்மே உதவி தேடுகிறோம்.

ஆமீன்.

Monday, March 4, 2013

நபி ஸல் அணுகுமுறைகளில் நாம் பெறவேண்டிய படிப்பினைகள்.

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக,

உருக்கமான ஜூம்மாஹ் உரை, மாற்று சமூகத்தினருடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அணுகுமுறைகளை இம்மாம் தொண்டைக்குழி அடைக்க கண் கலங்கியபடியே உரை நிகழ்த்தினார்.

அரங்கில் இருந்த சகோதரர்கள் அனைவருக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீதான நேசத்தால் உள்ளங்களும், கண்களும் கரைந்துருக்கும் என்று உணர்தேன்.

உரையில் பல சந்தரப்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிமுறைகளில் வந்த சமூகத்தில்தான் இருக்கிறேனா என்று எண்ணி வெக்கி தலைகுனிந்தேன்.

Facebook, Twitter மற்ற சமுக தளங்கள் பயன்படுத்தும் அனைவரும் தவறாமல் கேளுங்கள், படிப்பினை பெறுங்கள்.

டிஸ்கி: Facebook, Twitter, Comments, Post, Blogs, Meetings, அறிக்கைகள், கருத்துக்கள், பொதுக்கூட்டம் இதில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் தொடர்புடையவாராய் இருப்பின் கட்டாயம் உரையை கேளுங்கள் அன்பர்களே.

https://soundcloud.com/rifath-abdul-razack/jummah-urai-anugumuraigal

மார்ச் 1 - ஜும்மாஹ் உரை: மௌலவி. ஜியாவுத்தீன் மதனி

(மொபைலில் பதிவு செய்தது குறைவான ஒலி தரம் - மன்னிக்கவும்)

Wednesday, February 27, 2013

என் கல்வியின் குறிப்பேடு


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவனின் திருப்பெயரால் துவங்குகிறேன்.


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக,

இந்த வலைப்பூ என் கல்வியின் குறிப்பேடுகளாக வளம் வரும், எனக்கும் என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் பயனளித்திட வேண்டும் என்ற எண்ணத்தில் சாதாரண மனிதனாய் பதிவுலகில் இன்று நான்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு "A Picture worth than thousand Words" - "ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளை விட அர்த்தமுள்ளவை" அதுபோல் இந்த தளத்தை பற்றிய  புகைப்படம் இங்கே.இறை நாடினால் கல்வி பயணம் தொடரும்.

உங்கள் சகோதரன்,
ரிஃபாத் அப்துல் ரெஜாக்.