Tuesday, April 23, 2013

முஅத்தின் தொழுகைக்கு அழைப்பதை நீங்கள் செவியுற்றால் !!!!!!


முஸ்லிம்: அத்தியாயம்: 4, பாடம்: 4.07, எண் 577
"முஅத்தின் தொழுகைக்கு அழைப்பதை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். 


பின்பு என் மீது ஸலவாத் சொல்லுங்கள். யார் என் மீது ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகிறான்.

பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும். அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன்.

எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை கட்டாயம் உண்டு" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரிப்னில் ஆஸ் (ரலி)




-------------------------------------------------------------
முஸ்லிம்: அத்தியாயம்: 4, பாடம்: 4.07, எண் 578

முஅத்தின், 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' என்று சொன்னால் 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' என்றும்

பின்பு அவர், 'அஹ்ஷது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று சொன்னால் 'அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்' என்றும்

பின்பு அவர், 'அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்' என்று சொன்னால் 'அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்' என்றும்

பின்பு அவர், 'ஹய்ய அலஸ் ஸலாஹ்' என்று சொன்னால் 'லா ஹவ்லா வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்' என்றும் பின்பு அவர், 'ஹய்ய அலல் ஃபலாஹ்' என்று சொன்னால் 'லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்' என்றும்

பின்பு அவர், 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' என்று சொன்னால் 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' என்றும்

பின்பு அவர் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று சொன்னால் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்றும் உங்களுள் உளமுவந்து (திருப்பிக்) கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : உமர் பின் அல் கத்தாப் (ரலி)
------------------------------------
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, 'மக்களே! உங்களால் இயன்ற (நற்) செயல்களையே செய்துவாருங்கள். ஏனெனில், நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ்வும் சலிப்படைய மாட்டான்.

அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (நற்) செயல் யாதெனில், குறைவாக இருந்தாலும் நிலையாக இருப்பதேயாகும்' என்றார்கள்.
(புகாரி: 5861)
--------------------

யா அல்லாஹ் இந்த இலகுவான அமல்களை செய்து சொர்க்கத்தில் நுழைய, உன்னிடம்மே உதவி தேடுகிறோம்.

ஆமீன்.

Monday, March 4, 2013

நபி ஸல் அணுகுமுறைகளில் நாம் பெறவேண்டிய படிப்பினைகள்.

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக,

உருக்கமான ஜூம்மாஹ் உரை, மாற்று சமூகத்தினருடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அணுகுமுறைகளை இம்மாம் தொண்டைக்குழி அடைக்க கண் கலங்கியபடியே உரை நிகழ்த்தினார்.





அரங்கில் இருந்த சகோதரர்கள் அனைவருக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீதான நேசத்தால் உள்ளங்களும், கண்களும் கரைந்துருக்கும் என்று உணர்தேன்.

உரையில் பல சந்தரப்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிமுறைகளில் வந்த சமூகத்தில்தான் இருக்கிறேனா என்று எண்ணி வெக்கி தலைகுனிந்தேன்.

Facebook, Twitter மற்ற சமுக தளங்கள் பயன்படுத்தும் அனைவரும் தவறாமல் கேளுங்கள், படிப்பினை பெறுங்கள்.

டிஸ்கி: Facebook, Twitter, Comments, Post, Blogs, Meetings, அறிக்கைகள், கருத்துக்கள், பொதுக்கூட்டம் இதில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் தொடர்புடையவாராய் இருப்பின் கட்டாயம் உரையை கேளுங்கள் அன்பர்களே.

https://soundcloud.com/rifath-abdul-razack/jummah-urai-anugumuraigal

மார்ச் 1 - ஜும்மாஹ் உரை: மௌலவி. ஜியாவுத்தீன் மதனி

(மொபைலில் பதிவு செய்தது குறைவான ஒலி தரம் - மன்னிக்கவும்)

Wednesday, February 27, 2013

என் கல்வியின் குறிப்பேடு


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவனின் திருப்பெயரால் துவங்குகிறேன்.


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக,

இந்த வலைப்பூ என் கல்வியின் குறிப்பேடுகளாக வளம் வரும், எனக்கும் என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் பயனளித்திட வேண்டும் என்ற எண்ணத்தில் சாதாரண மனிதனாய் பதிவுலகில் இன்று நான்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு "A Picture worth than thousand Words" - "ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளை விட அர்த்தமுள்ளவை" அதுபோல் இந்த தளத்தை பற்றிய  புகைப்படம் இங்கே.



இறை நாடினால் கல்வி பயணம் தொடரும்.

உங்கள் சகோதரன்,
ரிஃபாத் அப்துல் ரெஜாக்.